முதல் பதிவை இன்று எப்படியும் எழுதி விடவேண்டுமென்று எழுதியது ராவணன் திரைப்படம் பற்றிய என்னுடைய தனிப்பட்ட விமர்சனம் . இன்றுதான் ஒரு நல்ல திரை அரங்கில் கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்க முடிந்தது.
திரையில் எனக்கு முதலில் தோன்றியது வசனம் தான், கார்த்திக்கின் வசனம் "காட்டுக்குள் கண்ணால் மட்டும் பார்த்தால் போதாது காதாலையும் பார்க்க வேண்டும்".
நடைமுறை தமிழில் கூட இப்படிப்பட்ட ஒரு வாக்கியத்தை பயன்படுத்துவது மிக மிக அரிது. பல கோடி மக்களால் பார்க்கப்படும் திரைப்படத்தில் உரையாடல் என்பது மிகவும் கருதப்பட வேண்டியது.
வசனகர்த்தா சுஹாசினி தமிழ்நாட்டில் வாழ்கிறாரா என்று கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே சாரு தன் இணையதளத்தில் மணிரத்னம் மேல்தட்டு வர்க்கத்துக்காக மட்டும் படங்களை எடுக்கிறார் என்று கூறியது நூற்றுக்கு நூறு உண்மை . மணிரத்னம் தன்னுடைய முந்தைய படங்களான உயிரே , குரு வகையை சார்ந்தவை இப்படமும். இனிமேலதன்னுடைய திரைப்படங்களை தமிழில் வெளியிடாமல் இருப்பது நல்லது.
5 comments:
thanks boss
haha nanri saru...:)
thanks boss
nanri brother...best wishes
Tamil? I have no clue :)
Post a Comment